இந்நாள் இனிய நாளாகட்டும்
ஜோதிடத் துறையில் மின்னும் பிரகாசமான சூரியன் எங்கள் குரு
திரு.சி.பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கு
ஸ்ரீ செல்வியின் பணிவான நமஸ்காரங்கள்.
பல வருடங்களுக்கு முன் தங்களிடம் தான் ஜோதிடம் பயில வேண்டுமென, விதைத்த விதை, இன்று வளர ஆரம்பித்துள்ளது.
இவரை என் குருவாய் பெற்றதை, பூர்வ ஜென்ம பலனாய்,
பெரும் பாக்யமாய் எண்ணுகிறேன்.
ALP அட்சய லக்ன பத்ததி குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பெரும் பாக்கியம் பெற்றவர்களே.
மிக சுலபமாக, அனைவருக்கும் நன்கு புரியும் வகையில் அவர் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த விதமே தனி அழகு.
ஒரு சில நாட்களில் அனைவரையும் பலன் சொல்லும் நிலைக்கு, நம்பிக்கையுடன் எங்களை உயர்த்தினார்.
அவர் இலக்கை அடையும் வரை விடா முயற்சியுடன் செயல்படுவார். நாங்கள் அனைவரும் ALP ஜோதிட குழுவில் இணைந்து பயணிக்க தயாராகிவிட்டோம். எங்கள் அனைவரையும் ALP ஜோதிடராய், அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
ALP முறையில் எதிர்காலம் எப்படி இருக்குமென கணித்து,
நம் வாழ்க்கையை திட்டமிட்டு வழி நடத்தமுடியும்.
அனைவரும் ALP முறையை கற்று பயன்பெற வழிகாட்டுவோம்.
தாய்வழி கர்மா, தந்தைவழி வினைப்பயன், நிகழ்கால வினைபயன் விளக்கி புரிய வைத்தார். நம் வாழ்க்கையை திட்டமிட்டு வழிநடத்த ஜோதிட முறை காலக்கண்ணாடி ஆகும்.
இதன் அனைத்து பெருமையும் எங்கள் குருவிற்கே.
கிரகங்களை உணர்ந்து பலன் சொல்ல ஆரம்பிக்க கற்றுக்கொடுத்தார்.
நம் வினைப் பயன் என்ன? எந்த கால வினைப்பயனை நாம் அனுபவித்து கடக்க வேண்டும். நம் வினைகளே, கர்மாவாக திரும்ப வரும் என்று பல சூட்சுமங்களை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்.
ALP முறையில் கற்றுத் தேர, ஆசானாய் ,நல்ல நண்பராய் எங்களுடன் கை கோர்த்து அன்புடன் பயணிப்பவர். அவரின் ஆராய்ச்சியில் அவர்
கண்டுபிடித்த ALP அட்சய லக்ன பத்ததி முறையை எங்கள் அனைவருக்கும் அட்சய பாத்திரமாய் வழங்குகிறார்.
அவரின் அன்பு,அக்கறை, இலக்கு, வழிநடத்துதல் இவைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அதை உணரத்தான் முடியும்.
#அட்சயலக்னபத்ததி முறை மிகத் துல்லியமாய் பலன் சொல்லும் முறை. கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலத்தை சுலபமாய் கணிக்கும் முறை. ALP முறையில், அவரது மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரி ஜோதிட பலன்களை சொல்வார்கள்.
ஆராய்ச்சிகள் செய்து காலவிரயம் வேண்டாம்.
நான் கற்றுக் கொடுக்கும் வழிமுறைகளை (Rules) பின்பற்றவும், பின்பற்றி
பலன் சொல்லுங்கள். இதுவே , இவரது தாரக மந்திரம்.
நாங்கள் அனைவரும் அவ்வழியை பின்பற்றுகிறோம்.
பலன் அடைந்தோம்.
குருவின் வழிகாட்டுதலில் பயணிப்போம் முன்னேறுவோம்.
அவர் அனைவரும் மிகச் சிறந்த ALP ஜோதிடராய் வந்துவிடுவீர்கள் என்ற வார்த்தையை மெய்யாக்குவோம்.
அவரின் குழுவினருடன் அறப்பணிகளில் பணியாற்றுவோம்.
திரு.சி. பொதுவுடை மூர்த்தி சாருக்கு வணக்கங்கள்,மனமார்ந்த நன்றி. தங்கள் அனைத்து செல்வ வளங்களையும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகின்றோம்.
நம் குழுவில் இணைய ஆசிரியர்கள்.
திருமதி. #சாந்திதேவி_ராஜேஷ்குமார்,
திரு. #சத்திய_நாராயணன்,
திரு. #சாந்தகுமார், மற்றும்
திரு.#அரவிந்
திரு. #திருமலை_கேசவன்
மற்றும் அனைவருக்கும் நன்றி.
Comments
Post a Comment