Skip to main content

அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் சார்பாக மீண்டும் ஒரு முறை நன்றி

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.

24.3.2022, வியாழக்கிழமை அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் மற்றும்   
ALPAIR FOUNDATION  இணைந்து வழங்கிய சுயம்வர பார்வதி ஹோமம் கள்ளக்குறிச்சியில் சிறப்பாக நடைபெற்றது.

அதில்  மாநில ஒருங்கிணைப்பாளர்களை கௌரவிக்க கூடிய நிகழ்வும் அதன் பிறகு இலவசமாக ஜாதகம் பார்க்க கூடிய நிகழ்வும் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கும் முதலில் நன்றி.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து, மிக முக்கிய பங்காற்றியவர் கள்ளக்குறிச்சி திருமலை கேசவன் ALP மாநில ஒருங்கிணைப்பாளர்  மிகவும் சிறப்பாக செய்திருந்தார். 

காலை 6.30 - 7.30 மணி வரை கூட்டுப்பிராத்தனை
8.00-12.30 மணிவரை சங்கல்பம், சுயம்வர  பார்வதி ஹோமம். 
 17 க்கும் மேற்பட்ட  சிவாச்சாரியர்கள் கலந்து கொண்டு  சுயம்வர பார்வதி ஹோமம்  சிறப்பாக நடைபெற்றது.
அதில் 130 க்கும் மேற்பட்ட திருமணம் ஆகாத ஆண், பெண்கள் கலந்து கொண்டு அவர்களுடைய  வாழ்க்கையில்  திருமண வாழ்க்கை புதிய ஒரு சந்தோஷமான மண வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.
அவர்களுக்கு நன்றி. பொதுமக்களும் பெற்றோர்கள்  மற்றும் ஏனைய நண்பர்கள் சுமராக 600க்கும் மேற்பட்ட நண்பர்கள் கலந்து கொண்ட நிகழ்வு சிறப்பாக அமைந்தது.

12.30-1.30 மணி வரை ALP நண்பர்களுக்கு சிறப்பு செய்தல், பட்டமளிப்பு விழா. மாநில ஒருங்கிணைப்பாளர்  திருமலை கேசவன் மற்றும் நண்பர்களை  சிறப்புவிக்கும் விதமாக இதில் அட்சய லக்ன பத்ததி உயர்நிலை வகுப்பு முடித்த 25க்கும் மேற்பட்ட ஜோதிட நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்புச் செய்யக்கூடிய அட்சய லக்ன பத்ததி மற்றும் ALPAIR FOUNDATION சார்பில் அவர்களை கௌரவித்து  சிறப்பு செய்தது மற்றும் ஏனைய நண்பர்கள் வாழ்த்து கூறிய நிகழ்வு அமைந்தது.

1.30 - 5.00 மணிவரை ஜாதகம் பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது.
அதன்பிறகு அந்த  25  பேரும் ஒவ்வொருவரும் 20க்கும் மேற்பட்ட  ஜாதகங்கள் ஒவ்வொருத்தர்  தனித்தனியாக பார்த்து அவர்களுடைய வாழ்க்கையில் எது நல்லது, எது கெட்டது,  வரக்கூடிய காலங்கள் எப்படி இருக்கு, திருமண உறவுகள் எப்படி இருக்கு, திருமணம் சார்ந்த விஷயங்கள் எப்படி இருக்கு,  திருமண பொருத்தங்கள் எப்படி இருக்கு இப்படி நிறைய விஷயங்களை பேசினார்கள்.

திருமண பொருத்தம் ஏன் ஏற்படுத்தப்படுகிறது, திருமண பொருத்தம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, ஆண் பெண் உறவுகள் ஏன் இவ்வளவு முக்கியதுவமாக இப்படி நடக்கிறது, என்பதற்காக 
அட்சய லக்ன பத்ததி மென்பொருள் சார்ந்த விஷயங்களும் சரி,
அட்சய லக்ன பத்ததி 4 வது புத்தகம் திருமண பொருத்தம் பற்றிய புத்தகமும் சரி,  இதைப்பற்றி நிறைய நிகழ்வுகள் கலந்துரையாடப்பட்டது.

அதன் பிறகு இந்த ஜாதகம் பார்க்கும் நிகழ்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட அட்சய லக்ன பத்ததி உயர்நிலை ஜோதிட நண்பர்கள் அனைவருக்கும் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை சார்பாகவும் மற்றும் ALPAIR FOUNDATION சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மற்றும் இந்த நிகழ்வோடு காலை 8.00 மணி  முதல் மாலை 5.00 மணிவரையும் சிறப்பாக ஏற்பாடு செய்த அத்தனை நண்பர்களுக்கும் சரி, திருமலை  கேசவனுடைய ஒத்துழைப்பு கொடுத்த நண்பர்களுக்கும் சரி, அதில் முக்கியமாக   நாராயணன் மற்றும் குடும்பத்தினர்களும், ராஜகோபால் அவர்களின் குடும்பத்தினரும் சரி,
சீனு, அவர்களின் குடும்பத்தினர்கள்,
 சதீஷ் அவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் ஏனைய நண்பர்கள் ஒவ்வொரு நிகழ்வையும் கவனமாக  பார்த்து ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரையும்  எந்த ஒரு சிறு தடையும் இல்லாமல் ஒத்துழைப்பு கொடுத்த எங்களுடைய  இயற்கை பிரபஞ்சத்திற்கும், பேராற்றலுக்கும் நன்றி சொல்கிறோம்.

ஏன்னா? ஒரு நிகழ்வு ஆரம்பித்து அந்த நிகழ்வு காலை 8 மணிக்கு சங்கல்பம் செய்த நண்பர்கள்  திருமணம் ஆகாத ஆண், பெண் இருவரும் மதியம் 1 மணி வரைக்கும் மாலை கழட்டக் கூடாது என்று கூறினோம் அதை கேட்டு ஒரே இடத்தில் உட்கார்ந்து  பிரார்த்தனைகளில்  ஈடுபட்டு விஷயம் என்ன வென்று சொல்லி புரியவைத்து இந்த  கிரகங்கள் எல்லாம் மனிதர்களுடைய  வாழ்க்கையில் எப்படியெல்லாம் பங்கு வகிக்கிறது என்று சொல்லி புரிய வைத்தது,

உதாரணமாக, சூரியன் பலமாக அமைந்தால்   என்னுடைய புகழ், கெளரவம், அதிகாரம், ஆட்சி, யோகம் அப்படி சொல்லிகிட்டு என்னுடைய கௌரவத்துக்கும் இன்னொரு கௌரமான பெண் அதாவது  இந்த  புகழுக்கு இந்த புகழ் வரணும் என்று சொல்லி அதற்கு சமமாக பார்க்கும் பொழுது  அந்த புகழ் இதை விட பெரிதாக எதிர்பார்க்கக்கூடிய அமைப்பை ஏற்படுத்தும். 
மாப்பிள்ளை வீட்டில்  வசதி என்றால் அதே அளவிற்கு பெண் வீட்டிலும் வசதி வரணும் என்று நினைக்றாங்களோ  அதற்கு சூரியன் பலமாக அமையும். 
அதற்கு இந்த   சூரிய கிரகம் எப்படியாவது அதனுடைய தன்மைகளை காமிக்கும். 

இந்த மாதிரியான 9 கிரகங்களும், 12 ராசிகளும், லக்னங்களும் எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தோம். கலந்துரையாடினோம். 
நிறைய விஷயங்கள் கலந்துரையாடப்பட்டது. 
அதில் மிக முக்கியமாக ஊர் பொதுமக்கள் நிறைய பேர் ஆதரிச்சிருக்காங்க.

குறிப்பாக கள்ளக்குறிச்சியில் மஹாலெட்சுமி திருமண மண்டபம் அவர்களுடைய  குடும்பத்தினர்களுக்கும் நன்றி சொல்லனும். அதுபோல் அந்த ஊரில் உணவு உபசரிப்பும் சரி ரொம்ப அருமையாக இருந்தது. 
காலை, மதியம், இரவு உணவு  உபசரிப்பு மிகவும்   சிறப்பாக இருந்தது. 

ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்யப்பட்டது. 
இதில் கலந்து கொண்ட திருமணம் ஆகாத  ஆண், பெண் இருவருக்கும் கூடிய விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்று நாம் எல்லாரும் வேண்டிக் கொண்டோம். அவர்களும் வேண்டிகிட்டார்கள். 
கூட வந்த உறவினர்கள், நண்பர்கள் இந்த நிகழ்வை இவ்வளவு சிறப்பு கொடுத்து, முகநூல் நண்பர்கள்  எல்லாருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்கிறோம்.

  அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் சார்பாக மீண்டும் ஒரு முறை நன்றி, வணக்கம்.

Comments