Skip to main content

30 வருடமாக பழனி பாதயாத்திரை செல்வேன்.

குரு வாழ்க!              
குருவே துணை!

குருஜி அவர்களுக்கு வணக்கம். 
மற்றும் ஆசிரியர், ஆசிரியை அனைவருக்கும் வணக்கம்.

 ஒரு 4 மாதம் முன் வரை எதுவும் அறியா நிலை, ALP என்ற குடும்பத்திற்கு உள்ளே நுழைந்தவுடன். அந்த அனுபவம் வாய்விட்டு சொல்ல முடியாத நிலை, அதை அனுபவித்தால் தான் தெரியும். ஒரு தாய் பிரசவ வேதனையில் துடித்தாலும், அவள் குழந்தையை ஈன்றபோது அந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை என்பது போல அதை அனுபவித்தேன்.

எனக்கு 2007 முதல் ஜோதிடத்தின் மேல் ஒரு தாக்கம் இருந்தது.
நான் ஆவின் பணியாற்றிக் கொண்டே மாலை நேரம் பாரம்பரிய வகுப்புகளில் கலந்துகொண்டு ஜோதிடம் கற்று 
3, 6, 8, 12 மறைவு ஸ்தானம் இந்த இடங்கள் சுபகிரகங்கள் இருந்தால் நன்மை செய்யாது என்று ஆசிரியர் கூறியதைக் கேட்டு, என் ஜாதகத்தில் 4 கிரகங்கள் லக்னம் 3ல் இருந்தால் 6-9 உடைய புதன் 7 ஆதிபத்தியம் பெற்ற சந்திரன் 8 அதிபதி சூரியன் இவர்களுடன் கேது இருந்தார்.

பலரிடம் ஜாதகம் பார்த்த போது பலரும் பலவிதமாக கூறினார்கள்.
நம் தலையெழுத்து என்று இவ்வளவு நாள் கழித்தேன். #30 வருடமாக பழனி பாதயாத்திரை செல்வேன்.
அப்போது முருகனிடம் எனக்கு சரியான குருவை காட்டு என்று வேண்டிக் கொள்வேன்.

ஆண்டவன் செவிமடுத்து குருஜியை காட்டினார். Free Class ல்  ஆசான் தேதி வருடத்துடன் இப்படி நடக்கும் என்று அடித்துச் சொல்வதையும்,
குருவின் முகத்தில் தெய்வ பொலிவை கண்டேன். என்னை ALP ஈர்த்தது. இதற்கு நுழைய அனுமதித்த அம்மா சாந்தி தேவி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

நமது குருஜி போல எந்த ஒரு ஆசிரியையும் பார்த்ததில்லை.
முதல்நாள் வகுப்பிலேயே அழகாக கூறினார்." நான் சொல்வதை மட்டும் படித்தால் உங்கள் கைகளை பிடித்து நான் கூட்டி வந்து விடுவேன்"
என்று கூறினாரே அன்றே அவரின் உயர்ந்த உள்ளம் எல்லோருக்கும் பிடித்துவிட்டது.
ஒவ்வொரு வகுப்பு நடத்தும் போதும். நமக்கு புரியும் வரை விடாமல் LKG மாணவருக்கு சொல்வதை போல் சொல்லி புரிய வைத்தவர்.குரு அவர் எத்தனை வருடம் ALP யை கண்டுபிடிக்க எவ்வளவு துன்பம் அனுபவித்திருப்பார்.
தாய் தந்தையரை விட்டு  வடநாட்டுக்குச் சென்று 
"நீம் கரோலி பாபா"  அவர்கள் ஆசியுடன் ALP என்ற அட்சய பாத்திரத்தை கண்டுபிடித்தார்.
அதனை அனைவருக்கும் சொல்லி தந்து ஜோதிடர் அனைவரும் ஒரே மாதிரியான பலனை சொல்லவேண்டும் என்று அனைவருக்கும் தான் கற்றதை சொல்லிக் கொடுக்கும் விதம் மனதிற்கு சந்தோஷமாக இருந்தது.

வகுப்பில் படிக்கும் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று அவர் கூறும்போது, 
கூடப் பிறந்தவர்களே கண்டு கொள்ளாத போது, தன்னிடம் படிக்கும் மாணவனும், அவன் குடும்பம் நல்லா இருக்கணும் என்று கூற யாருக்கு மனம் வரும். 
லட்சத்தில் ஒருவர் நமது குருஜி அவர்கள். அதர்மம் தலை விரித்து ஆடும் போது, கடவுள் அவதரிப்பார் என்று கூறுவார்கள். அது போல் கடவுள் குருவின் மூலம் நம்மை காக்க வந்த அவதார புருஷன்.

 இதைப்போல அவர் குணத்தை சொல்வதற்கு ஒரு ஜென்மம் போதாது. எந்த ஒரு தருணத்திலும் அவரை விட்டுப் பிரியாமல் அவருடன் பயணம் செய்ய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
 குரு அவர்கள் குடும்பத்துடன் 100 வருடங்கள் வாழ அழகுமலையானை பிரார்த்திக்கிறேன். 

நன்றி!
#மதுரை #மாதவன்.

Comments

Popular posts from this blog

அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் சார்பாக மீண்டும் ஒரு முறை நன்றி

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். 24.3.2022, வியாழக்கிழமை அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் மற்றும்    ALPAIR FOUNDATION  இணைந்து வழங்கிய சுயம்வர பார்வதி ஹோமம் கள்ளக்குறிச்சியில் சிறப்பாக நடைபெற்றது. அதில்  மாநில ஒருங்கிணைப்பாளர்களை கௌரவிக்க கூடிய நிகழ்வும் அதன் பிறகு இலவசமாக ஜாதகம் பார்க்க கூடிய நிகழ்வும் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கும் முதலில் நன்றி. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து, மிக முக்கிய பங்காற்றியவர் கள்ளக்குறிச்சி திருமலை கேசவன் ALP மாநில ஒருங்கிணைப்பாளர்  மிகவும் சிறப்பாக செய்திருந்தார்.  காலை 6.30 - 7.30 மணி வரை கூட்டுப்பிராத்தனை 8.00-12.30 மணிவரை சங்கல்பம், சுயம்வர  பார்வதி ஹோமம்.   17 க்கும் மேற்பட்ட  சிவாச்சாரியர்கள் கலந்து கொண்டு  சுயம்வர பார்வதி ஹோமம்  சிறப்பாக நடைபெற்றது. அதில் 130 க்கும் மேற்பட்ட திருமணம் ஆகாத ஆண், பெண்கள் கலந்து கொண்டு அவர்களுடைய  வாழ்க்கையில்  திருமண வாழ்க்கை புதிய ஒரு சந்தோஷமான மண வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண...

துல்லியமான முறை. இந்த ஜோதிட முறையை கண்டுபிடித்தவர் திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா

  வணக்கம் ALP ஜோதிட முறை: இது பாரம்பரிய ஜோதிடத்தின் பரிணாம வளர்ச்சி. யுகமாக யுகமாக உள்ள ஜோதிடத்தை அடுத்த நிலைக்கு அதாவது, இன்றைய காலகட்டத்திற்கு உடனடியாக பலன் சொல்லக்கூடிய ஒரு துல்லியமான முறை. இந்த ஜோதிட முறையை கண்டுபிடித்தவர் திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா, அவர்கள், Sir, என்ன சொல்றாங்கனா மனிதருடைய ஆயுள் 120 வருடம், 12 கட்டம் இருக்கு, ஜென்ம லக்னம் எங்கு இருக்கிறதோ அங்கிருந்து இந்த 12 கட்டத்திற்கும் ஒரு 120 வருட காலத்தில் பரவி வரும்பொழுது இந்த ,இந்த நிகழ்வுகள் இப்போ இப்போதான் நடக்கும் என்று துல்லியமாக சொல்லமுடியுது. இதைப்பற்றிய நிறைய Videos youtube-ல் இருக்கு. நீங்கள் அதைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஆனால், உங்கள் வயதிற்கேற்றது போல் லக்னம் மாறும்.என்பது தான் முக்கியம். ஒவ்வொரு 10 வருடமும் லக்னம் நகரும். ஆச்சரியமாக இருக்கா! வாங்க பார்க்கலாம். ALP ஜோதிட முறையை கண்டுபிடித்த திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் , வீட்டிற்கு ஒரு ஜோதிடர் என்ற முடிவு எடுத்திருக்கிறார். ஏன்னா? வீட்டிற்கு ஒரு ஜோதிடர், என்பது அந்தக் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் வழிநடத்தக் கூடிய அளவிற்கு இருக்கணும். ஏன்ன...