அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இந்த மென்பொருளை இப்போ Update செய்திருக்கோம்.
Update ல் நிறைய விஷயங்கள் பதிவு செய்திருக்கோம்.
அதில் மிக முக்கியமாக நம் அட்சய லக்ன பத்ததியில் கடைசியாக ஒரு ஜாதகதில் ,பிறந்த தேதி, பிறந்த நேரம் , பிறந்த இடம் பதிவு செய்து Submit கொடுத்த உடனே அதில் horoscope எல்லா விவரங்களும் வரும்.
அதில் கடைசியாக இப்பொழுது Notes என்ற ஒரு காலத்தை உருவாக்கியிருக்கோம்.
ஏன் இதை உருவாக்கினோம்? என்றால் இந்த அட்சய லக்ன பத்ததியில் நிறைய விஷயங்கள் Time Correction செய்யும்பொழுது கடந்த காலத்தில் நடந்த ஒரு 4, 5 நிகழ்வுகள் கேட்போம்.
அதாவது Transit /event
எப்ப வீடு வாங்கினீங்க?
எப்ப வீடு இடம் விட்டு இடம் மாறுனிங்க?
எப்போ வெளிநாடு போனீங்க ?
எப்ப மருத்துவமனை போனீங்க?
கல்யாண தேதி எப்பொழுது?
கல்யாணம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் எப்ப நடந்தது ?
இல்லை குழந்தை பிறந்த தேதி என்ன ?
இந்த மாதிரி ஒரு நிகழ்வுகளை நாம் கேட்டு அதில் பதிவு செய்து வைத்துக் கொண்டால் நாம் ஒவ்வொரு ஜாதகத்தையும் மறுபடி-மறுபடி ஆய்வு செய்யும் பொழுது அது பயன்படும்.
ஏன்னா? ஒவ்வொரு ஜாதகத்திற்கும் தனியாக எழுத முடியாது.
சாப்ட்வேரில் ஜாதகத்தை பதிவு செய்துவிட்டு அதை நோட்டில் எழுதும்பொழுது அது பயன்படாமல் இருந்தது.
அதுக்காகதான் சாப்ட்வேரில் #Notes என்ற காலத்தை கொடுத்து நீங்கள் நம்முடைய தரகுகளை அதில் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். அவர்களுடைய போன் நம்பர், அவர்களுடைய பெயர், அப்பா பெயர், அம்மா பெயர், அவர்களுடைய details கலெக்ட் பண்ணலாம்.
நாம் சின்ன சின்ன நிகழ்வுகளை எல்லாம் அதில் பதிவு பண்ணும் பொழுது அது Save ஆகும்.
நாம் எப்பொழுதெல்லாம் ஜாதகத்தை எடுத்து ஆய்வு செய்யும் பொழுது திருமண தேதி எப்படி நடந்து இருக்கு?
திருமண தேதி என்பது காதல் திருமணம் நடந்து இருக்கா?
காதல் திருமணம் இல்லையா?
இல்லை விருப்பப்பட்ட திருமணம் பிரச்சனையாகி நடந்ததா? பிரச்சனையாகி நடக்கலையா? இப்படி நிறைய நிகழ்வுகள் நாம் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளலாம்.
என்ற விஷயத்தை நாம் அட்சய லக்ன பத்ததியில் இப்போ புதுசா Update செய்து உள்ளோம்.
கண்டிப்பாக நீங்கள் update செய்யுங்கள்.
நன்றி.
வணக்கம்.
https://play.google.com/store/apps/details?id=com.guruvashishta.akshayalagnapaddati
#ALP_Astrology_software_update
Comments
Post a Comment